பொது பாதுகாப்பு அமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்படவில்லை: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை!
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tran Alas ), விசாரணைக்காக அழைக்கப்படவில்லை என்றும், சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாத்திரமே கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, ஒவ்வொரு குடிமகனும் ஒன்று கூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் உரிமையுண்டு என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள், தொழில்முறை அமைப்புகள், மாணவர்கள் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு குழுக்களால் இந்த உரிமை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இதுபோன்ற உரிமைகளைப் பயன்படுத்தும்போது, சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் பொல்லுகளை போராட்டக்காரர்களைக் கலைக்கும் நெறிமுறையாகப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முக்கிய கண்காணிப்பு அமைப்பாக தமது ஆணைக்குழு, இந்த நிலைமையை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகக் கருதுகிறது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, 1996ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆணையின்படி ஆணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளின் மூலம் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள், அரசியலமைப்பு ஏற்பாடுகள், இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடமைகள் மற்றும் மனித கண்ணியத்தை மதிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்குகிறதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களைச் சுற்றி நடத்தப்பட்ட போராட்டங்களைத் தடுக்கும் முயற்சியின் போது, பொலிஸாரின் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விசாரணைக்காக அழைக்கப்படவில்லை
இந்த சம்பவம் தொடர்பாகச் சாட்சியங்களை வழங்குவதற்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் இலங்கையில் வசிக்கும் எந்தவொருவரையும் அழைப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.
இந்த நிலையில், அமைச்சருடனான கலந்துரையாடல் எதிர்காலத்தில் அடிப்படை மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும், போராட்டத்தின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகளுக்கு இணங்க வழிகாட்டுதல்களைப் பரிந்துரைப்பதற்கும் உதவும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கியுள்ளது.
விசாரணைக்காக அழைக்கப்படவில்லை என்றும் சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாத்திரமே கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒன்று கூடுவதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் உரிமையுண்டு என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள், தொழில்முறை அமைப்புகள், மாணவர்கள் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு குழுக்களால் இந்த உரிமை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விசாரணை நடவடிக்கைகள்
இதுபோன்ற உரிமைகளைப் பயன்படுத்தும்போது, சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் பொல்லுகளை போராட்டக்காரர்களைக் கலைக்கும் நெறிமுறையாகப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முக்கிய கண்காணிப்பு அமைப்பாக தமது ஆணைக்குழு, இந்த நிலைமையை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகக் கருதுகிறது என்று மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, 1996ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆணையின்படி ஆணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளின் மூலம் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள், அரசியலமைப்பு ஏற்பாடுகள், இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடமைகள் மற்றும் மனித கண்ணியத்தை மதிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்குகிறதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2023 மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களைச் சுற்றி நடத்தப்பட்ட போராட்டங்களைத் தடுக்கும் முயற்சியின் போது, காவல்துறையினரின் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாகச் சாட்சியங்களை வழங்குவதற்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் இலங்கையில் வசிக்கும் எந்தவொருவரையும் அழைப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.
இந்தநிலையில், அமைச்சருடனான கலந்துரையாடல் எதிர்காலத்தில் அடிப்படை மனித உரிமை
மீறல்களைத் தடுப்பதற்கும், போராட்டத்தின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த மனித
உரிமைகளுக்கு இணங்க வழிகாட்டுதல்களைப் பரிந்துரைப்பதற்கும் உதவும் என்று மனித
உரிமைகள் ஆணைக்குழு விளக்கியுள்ளது.