ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை கட்சி தலைமையகத்துக்கு வருமாறு கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்து மூல அழைப்பு
இந்த அழைப்பு இன்று (10.10.2022) எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தைப் புறக்கணிக்க சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சந்திப்பு
கட்சியின் அரசியலமைப்பு திருத்தப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இந்நிலையில், அண்மையில் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து
நீக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெற்றிடங்களுக்குப்
புதிய நியமனங்கள் வழங்கப்படாத பின்னணியிலேயே குறித்த மாவட்ட மற்றும் ஆசன
அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.