பொதுஜன பெரமுனவில் இணையுமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் இளம் அரசியல்வாதியான சஞ்சீவ எதிரிமான்ன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சஞ்சீவ எதிரிமான்ன கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமொன்று அமைவது நிச்சயம் நடக்கும்.
அழைப்பு
அவ்வாறான கட்டத்தில் தயாசிறி போன்றவர்கள் அரசாங்கத்தில் இருப்பது கூடுதல் பயனளிக்கும்.
எனவே தயாசிறி ஜயசேகர பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
அவ்வாறு எம்முடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியொன்றைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |