யாழில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள தொடருந்து கடவையில், தொடருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து
குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நிலையில் தொடருந்து வரும்போது தொடருந்து கடவை மூடப்பட்டிருந்த போதும் அதனை கடப்பதற்கு முயற்சித்த வேளை தொடருந்து அவரது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (15) மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri