யாழில் தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் புங்கங்குளம் புகையிரத கடவையில் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தற்கொலை முயற்சி
இந்த சம்பவம் புங்கங்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை அதே தொடருந்தில் ஏற்றி மீள திரும்பி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என்பவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
