வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை
வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலஞ்சம், ஊழல் அல்லது மோசடிகளை எதிர்கொள்ளாமல் செயல்படக்கூடிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயம் மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் கைவிடப்பட்ட பல திட்டங்கள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முயற்சிகள் தோல்வி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகனங்கள், கணினிகள் மற்றும் வீட்டுவசதிக்காக அதிக தொகை செலவிடப்பட்டாலும், ஊழல் மற்றும் தரகு கலாசாரம் காரணமாக இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த முறைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் உறுதி
மேலும், சேவைகளை விரைவாகவும் லஞ்சம் இல்லாமல் வழங்கக்கூடிய மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான சூழலை உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் விவசாயம் மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




