தமிழர் பகுதிக்கு வந்து குவியும் கனடாவின் முதலீடுகள் (Photos)
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு திட்டம் சுமார் 10கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மாநகரசபையின் முதல்வர், தான் அண்மையில் மேற்கொண்ட கனடா பயணத்தின் பலனாக பலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை செய்வதற்கு ஆர்வத்தினை வெளிப்படுத்தியதாகவும் முதல் கட்டமாக இரண்டு முதலீடுகள் உடனடியாக செய்யப்பட்டதுடன் அவற்றில் ஒரு முதலீடு இளைஞர் விவசாய திட்டத்தினை நோக்காக கொண்டு சுமார் பத்துக்கோடி ரூபா செய்யப்பட்டுள்ளதாகவும்தனது தலைமையுரையில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரங்கள் விசேட ஆணையாளர்களிடம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் இன்றைய அமர்வானது இறுதி அமர்வாக நோக்கப்பட்டு சபை அமர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
