புத்தி சுவாதீனமற்ற பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த புலனாய்வாளர்: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
புத்தி சுவாதீனமற்ற பெண்ணை பாழடைந்த இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்லை பதில் நீதவான் சமித்த லால் வெடிசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாவனெல்லை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர், பஸ்யாலையில் புத்தி சுவாதீனமற்ற பெண்ணை ஏமாற்றிப் பாழடைந்த இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் பின்னர், நிட்டம்புவை பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் முன்வைத்த முறைப்பாட்டை ஆராய்ந்த நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
