அம்பாறை - இறக்காமம் பகுதியில் கைதான தாய் மற்றும் மகனிடம் தீவிர விசாரணை
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(30) மாலை ஐஸ் போதை பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்பு காவல்
இறக்காமம் விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 6 மில்லி 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்களான தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam