காணாமல் போனோர் அலுவலகத்தினால் யாழில் விசாரணைகள் ஆரம்பம்
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்டோருக்கு இன்று (16.08.2024) காலையிலிருந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விசாரணைகள்
இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் , நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
