காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும்! சுகிர்தராஜ் வலியுறுத்து
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனித அவலங்கள்
அவர் மேலும் கூறுகையில்,எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுத்துவரும் ஒன்றாகும்.
தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்பட்டு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்புள்ளன.
மனித புதைகுழி
எமது ஒன்றியம் கடந்த காலம் முதற்க்கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு.
தற்போதைய பேசுபொருளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொண்டு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
