வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க
வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
வவுனியா- குடியிருப்பு பகுதியில் இன்று (29) தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வதை முகாம் மாதிரி பல வதை முகாம்கள் இருந்தன.
பட்டலந்த வதைமுகாம் விவாதம்
தெற்கில் ஜே.வி.பி, யு.என்.பி பிரிந்து இருந்தது போன்று, வடக்கு - கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ, புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள்.
வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
முதல் கட்டமாக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பட்டலந்த வதைமுகாம் விவாதம் ஆரம்பிக்கப்படும்.
எல்லாப் பிரச்சினைகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
