விசாரணை வலையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்:1000 கோடி ரூபா சொத்து குவிப்பு
சட்டவிரோதமான முறையில் ஆயிரம் கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட சொத்துக்களை குவித்ததாக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் குறித்த முன்னாள் அமைச்சர் பெருந்தொகை சொத்துக்களை குறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக விரைவில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முன்னாள் அமைச்சர் 25 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் 15 ஆண்டுகளாக பிரதான அமைச்சு பதவிகளையும் வகித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள பத்திரிகை ஒன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த முன்னாள் அமைச்சர் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த முன்னாள் அமைச்சர் அவரது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உள்ளிட்டவர்களின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சில வங்கி கணக்குகளின் ஊடாக பல கோடி ரூபாய் பணம் பரிமாறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த முன்னாள் அமைச்சருக்கு பல ஆடம்பர வீடுகளும் வாகனங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதி சொகுசு ஆடம்பர குடியிருப்புகளில் வீடுகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த முன்னாள் அமைச்சருக்கு பெறுமதியான காணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதி 1000 கோடி ரூபாவை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வழக்கு தொடரப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam