படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 40ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் போராட்டத்தில் வைத்து முதல் கட்டமாக குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான
மேலும் பொதுமக்கள், வர்த்தகர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலருக்கும் குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
