பிள்ளையான் மீது பாயும் பயங்கரவாத தடை சட்டம்..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று(08.04.2025) இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சிவநேசதுரை சந்திரிகாந்தன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு 07, வித்யா மந்திரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றிய போது கடத்தப்பட்டார். அப்போது அவரது வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
