போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராகப் பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை இன்றைய தினம் (15.06.2023) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராகப் பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை
மேலும், இந்த ரிட் மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, இந்த பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து, உரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
