சி.ஐ.டிக்கு அனுப்பிய கடிதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சட்டமா அதிபர்
குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் எவ்வாறு கசிந்தது என்பதை விசாரிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர்; பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியைக் கடத்திச் சென்று சாட்சியங்களை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க வேண்டும் என்ற தனது முன்னைய அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு கோரும் கடிதம் கசிந்தமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் வெளியிட்ட பரிந்துரை
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் ஏற்கனவே தொலைபேசி மூலம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இது தொடர்பான, கடிதம், நாளைய தினமே அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே குறித்த மூவரையும் சாட்சியங்கள் இல்லாமையால், விடுவிக்குமாறு சட்டமா அதிபர் வெளியிட்ட பரிந்துரை, உயர்மட்டத்தில் பிரச்சினையை எழுப்பியிருந்தது.
தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட நிலையில்..
இதற்கிடையில், விடுவிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை சமர்ப்பிக்கலாம் என்ற சட்டமா அதிபரின் பரிந்துரையை மையப்படுத்தி, கடந்த திங்கட்கிழமையன்று, குற்றப்புலனாய்வுத்துறையினர், வழக்கு தொடர்பான புதிய உண்மைகள் அடங்கிய மூன்று கோப்புறைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்தனர்.
அத்துடன் 14 நாட்கள் அவகாசத்தையும் கோரியிருந்தனர்.
இதனையடுத்தே செவ்வாய்கிழமையன்;று, சட்டமா அதிபர் குறித்த மூவரையும் விடுவிக்கப்பதை தாமதிக்கும் உத்தரவை பொலிஸ் மா அதிபருக்கு விடு;த்திருந்தார்.
இதற்கான இரண்டு குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட நிலையிலேயே அது கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |