போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணை நிறைவு!
ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகளின்போது ஜனாதிபதி மாளிகையின் கட்டமைப்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று தொல்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
