எப்ஸ்டீன் மாளிகையில் விசாரணை - பிரபலங்களுடனான தொடர்புகள் குறித்து புதிய ஆதாரங்கள்
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஜெப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் நடைபெற்று வரும் விரிவான தேடுதல் வேட்டை, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், அவர் உலகளாவிய அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் கொண்டிருந்த இரகசியத் தொடர்புகள் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு
அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில், நியூ மெக்ஸிகோ மாகாண அரசு ஒரு சிறப்பு 'உண்மை கண்டறியும் குழுவை' (Truth Commission) அமைத்துள்ளது.
இந்தக் குழு, எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுமார் 26 ஆண்டுகளாகத் தடையின்றி எவ்வாறு இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்பதையும், அவருக்குத் துணையாக இருந்த முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விசாரணையின் மிக முக்கியமான பகுதியாக, எப்ஸ்டீனின் மாளிகையில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற முறைப்பாட்டின் பேரில் அதிகாரிகள் அங்கு தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, பல செல்வாக்கு மிக்க நபர்கள் இந்த மாளிகையில் வந்து சென்றது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஊழியர்களின் வாக்குமூலங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
எப்ஸ்டீன் விவகாரம் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கும் ஒரு அரசியல் சவாலாக மாறியுள்ள சூழலில், இந்த விசாரணை முடிவுகள் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து கேட்கும் வெடிக்கும் சத்தம்: போரை நிறுத்த விரும்பவில்லை; நாம் விரும்புவது இதுவே - ஈரான் அதிரடி