இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இல்லாத இழப்புகளை அமெரிக்கா சந்திக்கும்..! எச்சரிக்கும் ஈரான்
கார்க் தீவுக்கு எதிரான தனது இராணுவ ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை அமெரிக்கா செயல்படுத்தினால், அது "முன்னெப்போதும் இல்லாத" இழப்புகளைச் சந்திக்கும் என்று ஒரு இராணுவ வட்டாரம் ஈரானிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டாப் நீரிணையை "நிலை குலையச்" செய்வது ஈரானுக்கான ஒரு வழி என்று இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையுடன் இணைந்த தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக தடைப்படும்
'கண்ணீர்க் கதவு' என்றும் அழைக்கப்படும் பாப் அல்-மண்டாப் நீரிணை, அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனுக்கும், ஆபிரிக்க கடற்கரையில் உள்ள ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள 20 மைல் (32 கி.மீ) அகலமுள்ள ஒரு கால்வாய் ஆகும்.

இந்த வழித்தடம் சுயஸ் கால்வாய் வரை செல்கிறது. ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் எண்ணெய் வசதிகள் தொடர்பாக அமெரிக்கா ஒரு "பெரும் தர்மசங்கடத்தை" எதிர்கொள்கிறது என்றும் அந்த இராணுவ வட்டாரம் கூறியுள்ளது.
அமெரிக்கர்கள் கார்க் தீவைத் தாக்கினால், எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாகத் தடைப்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஈரான் தீ வைக்கும் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இழப்புகளை அமெரிக்கா சந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.