தேசபந்துக்கு எதிரான விசாரணை தொடர்பில் சபாநாயகர் விசேட உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கும் பிரேரணை கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பிரதம நீதியரசர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை
நிலையியற் கட்டளைகளின்படி, பிரதம நீதியரசர் இந்தக் குழுவிற்கு ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அதே போல் தேசிய பொலிஸ் ஆணையத்தின் தலைவர் மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு நிபுணரையும் நியமிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த குழு அடுத்த வாரம் தனது விசாரணையை தொடங்கும் என்று அறியப்படுகிறது.
விசாரணையை முடித்த பிறகு, இந்தக் குழு சபாநாயகரிடம் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri