நாமல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட முன்னாள் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து பொலிஸ் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணையைதொடங்கியுள்ளது.
20க்கும் மேற்பட்ட அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களின் சொத்துக்கள் குறித்து இந்த விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு
சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 23 மணி நேரம் முன்

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
