பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான ஆய்வு : வெளிநாட்டு ஆலோசகரை நியமித்த இலங்கை
பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகிய பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிரான ஆய்வுக்குத் தயாராவதற்காக, இலங்கை ஒரு வெளிநாட்டு ஆலோசகரை பணியமர்த்தியுள்ளது.
சட்டத்தரணியும் பணமோசடி தொடர்பான ஆசிய - பசுபிக் குழுவின் முன்னாள் நிர்வாகச் செயலாளருமான கோர்டன் ஹூக், இலங்கை மத்திய வங்கியால், ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாணய நிதியத்தால் பரிந்துரைப்பு
அவர் செப்டம்பர் 2023 இல், ஆசிய - பசுபிக் தூதுக்குழுவின் ஒருவராக இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இந்த நிலையில் அவருக்கான கொடுப்பனவுகள் மற்றும் விதிமுறைகளை, இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படவில்லை.
ஹூக், 2025 மார்ச் 25 முதல் உரிமம் பெற்ற வங்கிகள் உட்பட, இடைவெளிகளைக் கண்டறிந்து 2026 இல் பரஸ்பர மதிப்பீட்டிற்குத் தயாராவதற்காக ஒரு மதிப்பீட்டை மேற்கொள்வார் என்று, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி, இந்த ஆலோசகர் நியமனம் நிகழ்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: சிறந்த கண்பார்வையை சோதிக்கலாம்...இதில் மறைந்திருக்கும் 4 இலக்கங்கள் என்ன? Manithan
