தமிழ் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி - சொத்துக்களை பறிக்க நடவடிக்கை
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர்.
சொத்து விபரம்
இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின் நெருங்கிய சகாக்களின் பெயர்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் பெயரளவில் அவர்களின் நெருக்கமானவர்களின் பெயர்களில் இருந்தாலும், அவை உரிய அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசியல்வாதிகள்
இந்த அரசியல்வாதிகளில் கடந்த காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்களாகும்.
அத்துடன் ஆளுநர்கள் மற்றும் பல உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் அடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
