வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையத்தில் நேற்று அதிகாலை இலங்கை துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமது உணவுடன் வழமையான வாழைப்பழம் வழங்கப்படாததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
சர்ச்சைக்குரிய கருத்து
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த வாரம் நடத்திய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தொழிலாளர்கள் ஏற்கனவே கோபமடைந்துள்ளனர்.
ஜனவரி 9 அன்று கப்பலில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட்ட பலர் அரச செலவில் விருந்தளிக்கப்பட்டனர்.
எனினும் இதனை மறுத்த ராஜாங்க அமைச்சர், நிகழ்வை காணொளிப்படுத்தியவர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைமுகத்தில் சுற்றுலா செல்லும்போது, சாப்பாட்டுடன் எப்போதும் கிடைக்கும் வாழைப்பழத்தை அதிகாரிகள் வழங்கத் தவறுவதை மன்னிக்க முடியாது எனக்கூறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நான்கு மணி நேரம் நீடித்த வேலைநிறுத்தம்
இந்த வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்தது, அதன் பின்னர் ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் சென்றனர்.
இந்த விடயம் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதுடன், வாழைப்பழங்கள் வழங்கப்படாதது யாருடைய தவறு என்பதை முதலில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |