அமைச்சர் கெஹெலிய பொய் கூறினாரா..! புதிய கோணத்தில் விசாரணை

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Central Bureau of Investigation
By Aanadhi Feb 02, 2024 12:38 AM GMT
Report

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொய் சொல்லி ஏமாற்றினாரா என்றொரு கோணத்தில் புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  நேற்றுமுன்தினம் அவரை விசாரணைக்கு அழைத்த சம்பவம் மற்றும் அதற்கு சமூகமளிக்காமல் இருக்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்த காரணம் என்பன தொடர்பில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு தரமற்ற இம்யூனோகுளோபின் உள்ளிட்ட ஏராளமான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

பத்திரங்கள் மர்மம்

இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேர் தற்போதைக்கு விளக்கமறியலில் உள்ளனர்.

அமைச்சர் கெஹெலிய பொய் கூறினாரா..! புதிய கோணத்தில் விசாரணை | Investigation About Low Quality Drugs To Keheliya 

அதே ​நேரம் குறித்த காலப்பகுதியில் மருந்துக் கொள்வனவு தொடர்பான பத்திரங்களில் செயற்படுத்துகை குறிப்பு எனப்படும் மினிட்ஸ்களை உள்ளடக்கிய பத்திரங்கள் மர்மமாக காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கமைய நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வேறொரு வழக்கிற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதால் தன்னால் விசாரணைக்கு வர முடியாது என்றும் அதற்காக வேறொரு தினத்தை ஒதுக்குமாறும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

பலரிடம் வாக்குமூலங்கள்

ஆனால் அவர் உண்மையில் நேற்றுமுன்தினம் வேறொரு வழக்கிற்கு முன்னிலையாகாமல் இருந்த காரணத்தினால் தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாமல் போனதா? அல்லது இந்த விடயத்தில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொய்யான காரணம் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை திசைதிருப்பும் வகையில் நடந்து கொண்டாரா என்பது குறித்து தற்போது புதிய விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய பொய் கூறினாரா..! புதிய கோணத்தில் விசாரணை | Investigation About Low Quality Drugs To Keheliya

கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுமுன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானாரா? அவரின் வழக்கு எத்தனை மணிக்கு ஆரம்பமானது?, முடிவடையும் ​போது நேரம் என்ன?, அமைச்சர் நீதிமன்ற வளாகத்தில் எவ்வளவு நேரம் செலவழித்தார்? நீதிமன்றத்தை விட்டும் எத்தனை மணிக்கு சென்றார்? என்பன குறித்த தகவல்களைத் திரட்டும் பணியில் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று களத்தில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒருகட்டமாக மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இன்றையதினமும் கெஹெலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

சுவிட்ஸர்லாந்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுவிட்ஸர்லாந்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US