கொழும்பை நோக்கிய படையெடுக்கும் மக்கள் - ஆயிரக்கணக்கானவர்களுடன் வரும் ரயில்கள்(Photo)
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெக்கப்படுகின்றது.
இந்நிலையில், தமது எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் புகையிரத நிலையங்களில் இருந்து புகையிரதங்களை கொழும்புக்கு வருமாறு ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தி ரயில்களை இயக்க போராட்டகாரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, காலி, மாத்தறை, கண்டி மற்றும் அவிசாவளை ஆகிய ரயில் நிலையங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பை நோக்கிய வரும் ரயில்கள்
காலி புகையிரத நிலையத்தில் இருந்து 'சமுத்திர தேவி' ரயில் ஏற்கனவே போராட்டக்காரர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருஹுணு குமாரி ரயில் மாத்தறையில் இருந்து இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் இருந்து கொழும்புக்கு புகையிரதத்தை இயக்குமாறு புகையிரத நிலையங்களில் காத்திருக்கும் மக்கள் புகையிரத அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொது மக்களின் அமைதிக்கான உரிமையை மீறும் செயல்
எவ்வாறாயினும், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் பொது போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம், எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை அமைதியான பொதுப் போராட்டத்தை தடுக்கும் வகையில் பொது மக்களின் அமைதிக்கான உரிமையை மீறும் செயலாகும் என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வழமைக்கு திரும்பிய பேருந்து சேவை
இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேருந்து சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று(08) இரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொடருந்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக செய்தி-சிவா மயூரி