பயணிகள் புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பயணிகள் புகையிரத சேவை முன்னெடுக்கப்படுவது தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
புகையிரத சேவை
அதன்படி பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இரவு 9 மணி முதல் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகையிரத சேவைகள் இடம்பெறாது என புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது.
புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு |
எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் புகையிரத நிலையங்களுக்கு வருகைத் தர வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊரடங்கு நீக்கம்
இந்த நிலையில் இன்று காலை முதல் பொலிஸ் ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.