புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு
எதிர்வரும் (11)ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் அதிகரிப்பு
இதன்படி, புகையிரத கட்டணத்தை தற்போதைய பேருந்து கட்டணத்தை விட பாதிக்கும் குறைவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் பத்து அல்லது இருபது ரூபாவாக (20) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத கட்டணங்கள் மற்றும் இதர பகையிரத கட்டணங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
அண்மைய எரிபொருள் விலையேற்றத்தினால் இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொடர்ச்சியான நட்டங்கள் மேலும் அதிகரித்து, உரிய சேவையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் திருத்தப்படாத புகையிரத கட்டணங்களையும், கடந்த 14 ஆண்டுகளில் திருத்தப்படாத மற்ற புகையிரத கட்டணங்களையும் உயர்த்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.