நிறுத்தப்படும் எரிபொருள் விநியோகம்! மூடப்படும் நிரப்பு நிலையங்கள் - லங்கா ஐஓசி நிறுவனத்தின் விசேட அறிவித்தல்
புதிய இணைப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று (8) மற்றும் நாளை (9) விநியோகிப்பதற்கான எரிபொருளை இடைநிறுத்துவதற்கு லங்கா ஐ.ஓ.சி (IOC) தீர்மானித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லங்கா IOC தொடர்ந்து எரிபொருளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளைய தினம் மூட வாய்ப்புள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்த கூட்டுத்தாபனத்திடம் டொலர் இல்லை |
இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட வாய்ப்புள்ளது.
முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எமது முனையம் மற்றும் எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதுடன், லங்கா ஐ.ஓ.சி தற்போது பொது மக்களுக்கும் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.