ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் இரத்து
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகையிரத சேவைகள் இடம்பெறாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளுக்கு புகையிரத சேவைகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் புகையிரத நிலையங்களுக்கு வருகைத் தர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள்
இதேவேளை,கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கானது இன்று இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.