இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகை தருபவர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் காண புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகை யாத்திரை
எனவே, யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் இந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பக்க இடது மூலையின் மேல் தெளிவாகத் தெரியும் வகையில், சாரதியின் பார்வைக்கு இடையூறாகாத வகையில் ஒட்டப்பட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து தலதா மாளிகை யாத்திரைக்காகப் புறப்படும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கரை வழங்குமாறு இலங்கை பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
