மட்டக்களப்பில் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் (Photos)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளை மற்றும் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (29.01.2023) மாலை இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அறிமுகப்படுத்தப்பட்ட வேட்பாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களபப்பு தேர்தல் தொகுதிக்குள் உள்ளடங்கும் மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர் நகரசபை, மண்முனை மேற்குப் பிரதேசசபை, மண்முனைப் பற்றுப் பிரதேசசபை போன்ற உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







