கோவிட் தொற்றினால் மரணிப்போருக்காக விசேட சவப்பெட்டி அறிமுகம்
கோவிட்-19 பெருந்தொற்றினால் மரணிப்போருக்காக விசேட சவப்பெட்டியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகரசபையினால் இந்த புதிய வகை சவப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கார்ட்போர்ட்டைக் கொண்டு இந்த சவப்பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இந்த வகை சவப்பெட்டிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கோவிட் காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் ஹ_வெல்ல பொது மயானத்தில் இந்த வகை சவப்பெட்டியில் தகனம் செய்யப்பட்டது.
கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகள் இந்த தகனத்தை மேற்பார்வையிட்டுள்ளனர்.
புதிய சவப்பெட்டியின் ஊடாக சடலம் ஒன்றை தகனம் செய்வதற்கு சுமார் பத்தாயிரம் ரூபாவே செலவாகும் என தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகரசபை மேயர் ஸ்டென்லி டயஸ் தெரிவித்துள்ளார்.