ரணில் - சஜித் - அனுர ஆகியோருக்கு தென்னிலங்கை ஊடகங்கள் விடுத்துள்ள அழைப்பு
தமது பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் மற்றும் உறுதிமொழிகள் குறித்து நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தென்னிலங்கையின் இரு ஊடகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தாம் வெற்றி பெற்றால் நாடு முன்னேறும் என்ற அடிப்படையிலேயே இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
நேரடி ஒளிபரப்பு
இந்த விவாதம் நேரடியாக இணையத்தளங்களில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு மூன்று அரசியல் தலைவர்களையும் கோரும் முறையான அழைப்பிதழ் விரைவில் அனுப்பப்படவுள்ளதோடு மேலும் அழைப்பிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அது தொடர்பில் வாசகர்களுக்கு அறிவிக்கப்படும்.
விவாதம் நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் என்பனவும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
