நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்
முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் வைத்தியசாலையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்திருந்தார்.
பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி
இதற்கமைய குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த மனநிலையுடன் பெண்கள் குழந்தைகளை பிரசவிக்கின்றமை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.