நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
குழந்தை பிறக்கும் போது பிரசவ அறைக்கு தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிரசவத்தின் போது புதிய திட்டம்
அத்துடன், பிரசவத்தின் போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டம் தாயின் வலியை இருவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ள உதவும்.
அத்துடன் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான உறவும், பெற்றோர் மற்றும் குழந்தைக்கு இடையிலான உறவும் வலுவடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த நடைமுறையானது பெரும்பாலான தனியார் வைத்தியசாலைகளில் உள்ள போதும் இலங்கையில் அரச வைத்தியசாலையில் இதுவரையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |