சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீம் மனைவி உட்பட 6 பேரும், மொஹமட் முபாரக்கின் மனைவி உட்பட மேலும் 4 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருத்தப்படும் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதீயா உட்பட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹமட் முபாரகின் மனைவி அயேஷா சித்திகா உள்ளிட்ட 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri