ஹொரவ்பொத்தானையில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு விளக்கமறியல்
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் 19 வயதுடைய இளம் யுவதியை கட்டாயப்படுத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
ஹொரவ்பொத்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்ற நீதவான் மாலிந்த ஹர்ஷன த சில்வா முன்னிலையில் இன்று (01) ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை-அனுராதபுரம் பிரதான வீதி சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் எனவும், கல்பே பகுதியைச் சேர்ந்த 43 வயது மற்றும் நானுமில்லாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை - கம்ம கஹவெவ கிராமத்தில் வசித்து வரும் 19 வயதுடைய திருமணமாகாத இளம் யுவதி ஹொரவ்பொத்தானையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து கடந்த 28ஆம் திகதி மாலை 5.45 மணியளவில் பஸ் தரிப்பிடத்தில் இருந்து பேருந்jதில் ஏறி வேலை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளதாதாகவும், அந்த நேரத்தில் பேருந்தில் தனியாக இருந்ததாகவும், நடத்துனர் பேருந்து முன் மற்றும் பின் கதவுகளை மூடிவிட்டு வேறு பயணிகளை அழைத்துச் செல்லாமல் ஹொரவ்பொத்தானை -அனுராதபுரம் வீதியில் உள்ள நானுமில்லாவ வயல் பிரதேசத்துக்கு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் பேருந்தில் இருந்ததாகவும் அதேநேரம் சம்பவ இடத்திற்கு மற்றுமொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் குடித்துக்கொண்டிருந்ததாகவும்,அவர்கள் அதைப் பார்க்க முடியாதபடி பேருந்தின் முன் கதவை மூடி இருந்ததாகவும் திறக்க முயன்ற போதிலும் சந்தேகநபர்கள் அவர்களை துரத்தியதாகவும் யுவதி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளம் யுவதி கடந்த 29ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் கெப்பித்திக்கொல்லாவ நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
