கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவில் பாதுகாப்புப் படை வீரரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று (23) ஆஜர்படுத்தியபோது கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- மிகிந்தபுர பகுதியைச் சேர்ந்த ஏட்டிரியல் ரொஷான் சுமதிபால (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையைக் கடற்கரை பகுதியில் இரகசியமான முறையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரைச் சோதனையிட்டபோது 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைத் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய
போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri