இணைய வீசா நடைமுறை விவகாரம் : நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம்
மூன்றாம் தரப்புக்கு(outsourcing) கையளிக்கப்பட்ட இணைய வீசா விண்ணப்ப செயல்முறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் பதிலளித்துள்ளது.
இது குறித்து முறையான ஆய்வு மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் உலகம் முழுவதும் 146 மையங்களைக் கொண்ட VFS குளோபல் நிறுவனத்திற்கு அந்த செயல்முறை வழங்கப்பட்டது என்று தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆவண செயலாக்கம்
மேலும், வீசா ஒப்புதல் எப்போதுமே இலங்கை குடிவரவு நிறுவனத்தால் தக்கவைக்கப்படுகிறது என்று கூறியுள்ள திணைக்களம், VFS குளோபல் நிறுவனம், வேறு நாடுகளில் செயற்படுவதை போன்று ஆவண செயலாக்கத்தில் மாத்திரமே ஈடுபடுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களான நாங்கள், வேறு எந்த நாட்டிற்கும் பயணிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்கும்போது VFS குளோபலுக்குச் செல்கிறோம்.
எனவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் இலங்கைக்கு செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்கும் வசதியையும் குறித்த நிறுவனம் வழங்குகிறது.இது சுற்றுலாவை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொடர்புடைய வீசாக் கட்டணங்கள் அரச திறைசேரிக்கானது என்றும், வீசாவிற்கான ஆவணங்களைச் செயலாக்குவதற்கான, சேவைக் கட்டணங்களை மாத்திரமே நிறுவனம் பெறும் என்றும் அரசாங்கம் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |