மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கு இணைய கலந்துரையாடல்
தற்போதைய கோவிட் நிலைமை மற்றும் தொற்றுநோய்களின் போது நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க நாட்டின், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிவான்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இணையக் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைக்கப்பட்டனர்.
இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தில், தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் தொழிற்சங்க போராட்டங்கள் குறித்துப் பேசப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள், தொற்றுநோய் மற்றும் தாக்கங்கள் குறித்து நீதிபதிகளுக்கு விளக்கமளித்தனர்.
பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள், குறிப்பாக கோவிட் வைரஸ் பரவுதல் தொடர்பில் முக்கியம் பெறுவதாகச் சுகாதார அதிகாரிகளால், இதன்போது சுட்டிக்காட்டிடப்பட்டது.
ஆசிரியர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டங்களைத் தடை செய்ய காவல்துறை, சில நீதிமன்ற உத்தரவுகளைக் கோரி இருந்தது , ஆனால் நீதிபதிகள் இந்த விவகாரத்தில் கலப்பு உத்தரவுகளை வழங்கிஇருந்தனர்.
அவர்களில் சில நீதிபதிகள் போராட்டங்களுக்குத் தடை விதித்துள்ளனர், மற்றவர்கள் போராட்டத்திற்கு மக்கள் உரிமை உண்டு என்ற அடிப்படையில் போராட்டத்தை நிறுத்துமாறு மேற்கொள்ளப்பட்ட காவல்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
