தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்! அமைச்சரின் பணிப்புரை
சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய அவசர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இலங்கையில் அனுமதியில்லை...
இலங்கையில் அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளில், செயலில் உள்ள 40 பூச்சிக்கொல்லிகள் மிகவும் அபாயகரமானவை என்பது சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று பூச்சிக்கொல்லிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உரிய அறிக்கையை வழங்கினால், அது
தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
