புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் 1600 மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச யோகா தினம்
இந்தியத் துணைத் தூதரகமும் இலங்கை யோகாப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச யோகா தின நிகழ்வு நேற்றைய தினம் (17.06.2026) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் 1600க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு யோகாப் பயிற்சிகளை யோகா, சிலம்பம், கராத்தே மற்றும் வர்மக்கலை மாஸ்டர் ஜெயம் ஜெகன் வழங்கினார்.
அத்துடன் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த யோகாப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சர்வதேச சாதனையாளர் சி. அகிலத்திருநாயகி, இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வு மாணவர்களிடையே யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், உடல் மற்றும் மனநல மேம்பாட்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.










