சர்வதேசத்தை இலக்கு வைக்கும் பயங்கரவாத தடைச்சட்டத் திருத்தம்! நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு! (காணொளி)
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் உள்ளுாரில் பொதுமக்களுக்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக சர்வதேசத்தை திருப்திப்படுத்த கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்ட விடயம், நீதியமைச்சர் அலி சாப்ரியின் பொறுப்பில் இருக்கின்றபோதும் இந்த திருத்தத்தை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீாிஸ் கொண்டு வந்தமையானது,இந்த நோக்கத்தை எடுத்துக் காட்டுவதாக ரஹ்மான் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்துக்கு இன்று சர்வதேசத்தில் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் அதனை குறைக்க எடுக்கப்படும் முயற்சியே இது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புதிய திருத்தத்தின்படி, சட்டத்தின் அடிப்படைகள் மாறவில்லை. அமைச்சருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவரை இந்த சட்டத்தி்ன்கீழ் கைதுசெய்து தடுத்து வைக்கமுடியும்.
12 மாதங்களுக்கு வீட்டுக்காவலில் ஒருவரை தடுத்து வைக்கமுடியும்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரை நீதிவான் ஒருவர் சென்று பார்க்கமுடியும். அவர் தொடர்பில் உத்தரவுகளை வழங்கமுடியும்.
எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் இடத்தை மாற்றுவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் இடத்தை மாற்றுவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் வழங்குவதற்கான திருத்தம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை அமைச்சருக்கு சந்தேகம் உள்ள ஒருவரை காவல்துறையில் தடுக்கவைக்காமல், தேவையான இடத்தில் தடுத்து வைக்கமுடியும் என்ற அடிப்படையிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று முஜிபுர் குறிப்பிட்டார்.
அத்துடன் வாக்குமூலத்தின்போது ஒருவர் எவரையாவது சுட்டிக்காட்டினால் அவரையும் 12 மாதங்களுக்கு தடுத்து வைக்கமுடியும் என்ற அடிப்படையிலும் திருத்தம் கொண்டு வரப்படவில்லை.
இந்தநிலையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோதும் அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
எனினும் அவரை தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் ஜசீமிடம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இதற்கு மத்தியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சஹ்ரானுடன் இணைந்திருந்த சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
