அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவி கிடைக்காது:ராஜித
சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகி, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. அத்துடன் அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவியும் கிடைக்காது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் திருட்டு அரசாங்கம் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கு தீர்வாக கோட்டாபயவையும் ரணிலையும் அனுப்பி விட்டு, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நாட்டில் நல்லாட்சி ராஜதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri