சர்வதேச ஒத்துழைப்புடன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடாத்துமாறு சஜித் வலியுறுத்து!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை எடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைகள்
இந்த விசாரணைகள் வெளிப்படை தன்மையுடனும் நியாயமான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையிலேயே அம்பலப்படுத்த வேண்டும் எனவும் கசப்பான உண்மை எதுவென்பது தெரிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் தொடர்பில் நாம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடந்த காலங்களில் கூறிய விடயங்களை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றில் வழக்குத் தீரப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் சஜித் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அல்லது நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.