வவுனியாவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு
வவுனியா, ஓமந்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டடத் தொகுதியுடன் கூடிய தடகள விளையாட்டு மைதானம் நேற்று(12.06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுதத் திலகரத்ன அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மைதானம் நீண்ட காலமாக பயன்பாடு இன்றி காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் விளையாட்டு துறை அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து அது தொடர்பில் ஆராய்ந்ததன் அடிப்படையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மைதானம்
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், விளையாட்டுத் துறை அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
