இலங்கைக்கு அதிகரிக்கும் சர்வதேச உறவுகளும் அதன் முக்கியத்துவமும்!
இலங்கையின் சர்வதேச உறவுகளும் அதன் முக்கியத்துவமும் சமீப காலங்களில், முன்னரை விட அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக ஞாயிறு ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தால் 'மேற்பார்வை' செய்யப்படுகிறது.
முட்டை ஓட்டில் நடக்கும் இலங்கை
அதே நேரத்தில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பெரிய சக்தி இயக்கவியல் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் ரேடாரின் கீழ் நாட்டை கொண்டு வந்துள்ளது.
இதனால் இலங்கை உண்மையாகவே முட்டை ஓட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரம், சீன துணை வெளியுறவு அமைச்சர் கொழும்பில் இருந்தபோது, இந்தியாவில், அதன் வெளியுறவு அமைச்சர் தனது அண்டை நாடு முதல் கொள்கையை விரிவாக்கப்பட்ட அண்டை நாட்டுக்கு எவ்வாறு விரிவுபடுத்த விரும்புகிறது என்பதை அறிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கான உதவியில் இந்தியா எவ்வளவு 'தாராள மனப்பான்மையுடன்' இருந்தது என்பதற்கான உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சர்வதேச நாணய நிதியம் செய்ததை விட இந்தியா, இலங்கைக்காக செய்திருப்பது பெரியது என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், கொழும்பு துறைமுக முனையங்கள் மற்றும் வடக்கில் காற்றாலைகள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கோரி கடுமையான பேரம் நடத்துகிறார்.
சீனாவின் மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை நட்பு பெற முயற்சித்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், கொழும்பினால் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதற்கு பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அரசியல்வாதி, இந்திய இல்லத்துக்கு முதல் அழைப்பை பெற்றார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஒட்டோகிராப் கேட்டதும், அவுஸ்திரேலிய பிரதமர் அவரை ரொக் ஸ்டார் என்றும், பப்புவா நியூ கினியா தலைவர் அவரது கால்களைத் தொட்டதும், இந்தியப் பிரதமர் தனது நாட்டை உலக அங்கீகாரத்தில் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்வதை காட்டுவதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டில் தேர்தல் பின்னடைவுகள் இருந்தபோதும், பிரதமர் மோடி, விரைவில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸூக்கு சென்று ஜி20 உச்சிமா நாட்டை நடத்தவுள்ளார். அத்துடன் உலக தலைவர்களுடன் கைகுலுக்கவுள்ளார் என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |