சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஆபத்தான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படி, சர்வதேச தொடர்புகள் காரணமாக, சிவப்பு அறிவித்தல் இன்றியும் சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிகின்றது.அவ்வாறு 13 சந்தேகநபர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரு சந்தேகநபர்களும் சிவப்பு அறிவித்தல் இன்றியே கொண்டு வரப்பட்டனர்.
அதன்படி, தற்போது வரை 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொலை, பெரும் கொள்ளை, துப்பாக்கிகளை வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெரும் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam